மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 24 படம் வரும் 6ம் தேதி உலகம் முழுவதும் உள்ள சுமார் 2300 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சூர்யா நடித்துள்ள ஒரு படம் இதுவரை இந்த அளவிற்கு வெளியாகாத அளவிற்கு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படம் டைம் மிஷின் சம்பந்தப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் 24 படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரிமான்ட் நகரில் உள்ள சினி கிரான்ட் தியேட்டரில் மே 5ம் தேதி வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரிமியர் காட்சியில் நடிகர் சூர்யாவும் அவருடைய மனைவி ஜோதிகாவும் கலந்து கொள்கிறார்கள்.
கோடை விடுமுறை என்பதால் எஸ் 3 படத்திற்கு பிரேக் விட்டுவிட்டு, சூர்யா குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்றுள்ளார். சூர்யா, ஜோதிகா கலந்து கொள்ளும் 24 பிரிமியர் காட்சிக்கான அழைப்பை படத்தை வெளியிடும் சினி கேலக்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிரிமியர் காட்சியில் கலந்து கொள்பவர் சூர்யா, ஜோதிகாவுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.