ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரண்டாகியிருக்கிறது. அதில் ரஜினி பேசியுள்ள டயலாக் மற்றும் அவரது இரண்டுவிதமான கெட்டப்புகள் ரசிகர்களை கவர்ந்து வருவதால் கபாலி படத்துக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் கபாலி டீசருக்கு கொடுத்துள்ள இந்த வரவேற்பை பார்த்து அப்பட டைரக்டரான ரஞ்சித் மிகப்பெரிய சந்தோசத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், கபாலி படத்துக்காக ரஜினி எடுத்துக்கொண்ட மெனக்கெடலை யும் அவர் கூறி வருகிறார். அதில், கபாலி கதையை ரஜினி சாரிடம் சொல்லிவிட்டு வந்ததும், அவர் நிறைய ஹோம் ஒர்க் செய்யத் தொடங்கி விட்டார். அந்த கேரக்டருக்காக என்னென்ன அவுட்புட் கொடுக்கலாம் என்று யோசித்து என்னிடம் பகிர்ந்து கொண்டு வந்தார். அதோடு, படப்பிடிப்பை தொடங்கியபோது, கபாலி கேரக்டருக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார் ரஜினி சார்.
அதாவது, படப்பிடிப்பில் நான் மற்றவர்களின் காட்சிகளை படமாக்கியபோது, அவர் அவ்வப்போது தனியே நடந்து கொண்டிருந்தார். நானும் ஏதோ நடைபயிற்சி செய்கிறார் என்றுதான் நினைத்துக்கொண்டேன். ஆனால், பின்னர் என்னிடம் வந்து, இந்த படத்தில் கபாலி இப்படித்தான் நடப்பார். இப்படித்தான் ஸ்டைல் காட்டுவார் என்று சில விசயங்களை செய்து காட்டினார். ரொம்ப அருமையாக இருந்தது. அதைதான் இந்த படத்தில் ரஜினி சார் செய்திருக்கிறார். அந்த வகையில், கபாலியில் அவரது தனிப்பட்ட உழைப்பு நிறையவே உள்ளது என்கிறார் ரஞ்சித்.