ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் நந்தகுமார் தயாரிக்கும் அடுத்த படம் கத்திச்சண்டை. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். விஷால், தமன்னா இணையும் முதல் படம் இது.
இவர்களுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத், ஆகியாரும் நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்புகள் மே 2ந் தேதி சென்னையில் துவங்குகிறது. இது காமெடி கலந்த ஆக்ஷன் படம். கருப்பு நிற விஷாலும், சிவப்பு நிற தமன்னாவும் காதலிக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லப் போகிறார்கள். படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்வன் படங்களை இயக்கிய சுராஜ் அதே பாணியில் இயக்கும் காமெடி கமர்ஷியல் படம்.