ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போதைய தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் தமிழைப்போலவே ஆந்திராவிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவரது ஒவ்வொரு படங்களுமே ஆந்திராவில் கோலாகலமாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மே 6-ந்தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 24 படமும் ஆந்திராவிலும் தமிழகத்தைப்போலவே அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது.
மேலும், 24 படத்தை விஜய், அஜீத் படங்களுக்கு இணையான பல வெளிநாடுகளிலும்கூட வெளியிடுகிறார்கள். அந்த வகையில், அமெரிக்காவில் இந்தமுறை இதற்கு முன்பு சூர்யாவின் படங்கள் வெளியாகாத அளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகிறதாம். அதாவது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 250 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகயிருப்பதாக சொல்கிறார்கள். ஒருவேளை திரையிடும் அனைத்து ஏரியாக்களிலும் 24 படம் வசூல் சாதனை புரிந்தால் அமெரிக்காவில் வெளியான முந்தைய தமிழ் படங் களைவிட இப்படம் அதிகப்படியாக வசூல் சாதனை புரிய வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள்.