சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பெங்களூர் நாட்களுக்குப்பிறகு மஞ்சப்பை ராகவ் இயக்கும் படத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக நடிக்கிறார் ஆர்யா. முந்தைய படங்களுக்கு தனது உடல் எடையை அவ்வப்போது குறைத்து நடித்து வந்தவர், இந்த படத்துக்காக வெயிட் போட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் தனது விருப்ப உணவுகளை புல் கட்டு கட்டி வரும் ஆர்யா, அடிக்கடி ஜிம்மிற்கு சென்றும் ஒர்க்அவுட் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது கட்டுமஸ்தான உடல்கட்டுக்கு மாறியிருக்கும் அவரது உடல் எடை 85 கிலோவை தாண்டி விட்டதாம்.
அதேபோல், பாகுபலியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தை தொடரும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது பாடி வெயிட் போட்டு வருகிறார். பாகுபலிக்குப் பிறகு இந்தி, தெலுங்கில் தயாராகும் கஸி என்ற படத்தில் கடற்படை வீரராக நடிக்க வெயிட் குறைத்து நடித்து வந்த ராணா, இப்போது அந்தபடத்தை முடித்து விட்டதால், பாகுபலி-2வுக்காக மீண்டும் வெயிட் போட்டுக்கொண்டிருக்கிறார். அதற்காக தினமும் ஜிம் சென்று ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறாராம் ராணா.