ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய நயன்தாராவின் திரையுலக பயணம், புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்று, இணையம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், இந்த ஆண்டில், அதிகமானோரால் விரும்பப்படும் பெண்ணாக, தேர்வு செய்யப்பட்டுள்ளார் நயன். ஸ்ருதி, சமந்தா, அனுஷ்கா போன்ற நடிகையரை ஓரங்கட்டி, இந்த சாதனையை எட்டியுள்ளார் நயன். சரத்குமார், ரஜினி காந்த், அஜித், விஜய், ஜெய், விஜயசேதுபதி என, மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கோலிவுட்டை பொறுத்தவரை, ஹீரோயின்களுக்கு, அதிகபட்சமாக, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செல்வாக்கு இருக்காது. ஆனால், 12 ஆண்டுகளை கடந்தும் நயன்தாராவின் மேஜிக், ரசிகர்களை வசியம் செய்துள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது.