ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் கண்டேன் காதல் கொண்டேன். கண்டவுடன் காதல் கொள்வது எவ்வளவு ஆபத்தானது. ஒருவரை நன்றாக புரிந்து கொண்ட பிறகே காதலிக்கத் தொடங்க வேண்டும். கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல் என்பதெல்லாம் வேஸ்ட் என்கிற தத்துவத்தை சொல்கிற படமாக உருவாகி உள்ளது. குகன், அஸ்வினி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். மயில்சாமி முக்கிய கேரக்டரில நடித்திருக்கிறார். கிரியேட்டிவ் டீம் சார்பில் இ.ஆர்.ஆனந்தன் தயாரித்திருக்கிறார். புதுமுகம் வெங்கட்ஜி.சாமி இயக்கி உள்ளார்.
“கண்டவுடன் காதல் கொண்டு காமம் தலைக்கேறி வீட்டை விட்டு ஓடும் காதலர்கள்.
ஒருவருக்குகொருவர் ஒத்து வராமல் அவர்கள் காதலுக்கு அவர்களே வில்லனாகிறார்கள். பெற்றவர்களை பிரிந்து ஓடியவர்கள் மீண்டும் பெற்றவர்களிடையே தஞ்சம் அடைகிறார்கள். அதன் பிறகு அவர்கள் காதல் என்ன ஆகிறது என்பதுதான் கதை. காதலுக்கு உடல் ஒற்றுமையை விட மன ஒற்றுமைதான் முக்கியம் என்பதை சொல்லும் படம். என்கிறார் இயக்குனர் வெங்கட் ஜி.சாமி.