ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகில் தற்போது முதலிடத்தில் இருக்கும் நாயகி ராகுல் ப்ரீத் சிங். ஏறக்குறைய இன்றைய இளம் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் இவர் ஒருவரே. மிகப் பெரிய ஹிட் படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும் ஏனோ, தெலுங்குத் திரையுலகத்தினரும், திரையுலகினரும் இவரைக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எப்படி நயன்தாராவோ, அப்படி தெலுங்கில் ராகுல் ப்ரீத் சிங் இருக்கிறார் என்கிறார்கள் டோலிவுட்டினர்.
தமிழில் 'புத்தகம், என்னமோ ஏதோ' என்ற இரண்டு தோல்விப் படங்களில் நடித்தவர்தான் இந்த ராகுல் ப்ரீத். அதன் பின் தெலுங்கில் மளமளவென பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து தன்னை முன்னணிக்கு கொண்டு வந்துவிட்டார். சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரை அங்கு பின்னுக்குத் தள்ளிய பெருமை இவரையே சாரும்.
ராகுலின் தமிழ் ரீ-என்ட்ரியைப் பார்த்து இங்குள்ள மற்ற ஹீரோயின்கள் இப்போதே இந்த கோடை வெயிலில் டபுள் மடங்காக வேர்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். காரணம் படத்தை இயக்கப் போவது மிஷ்கின், நாயகனாக நடிக்கப் போவது விஷால். அதற்காகத்தான் மற்ற தமிழ் ஹீரோயின்கள் நீண்ட நேரம் நட்சத்திர கிரிக்கெட்டில் இல்லாத நிலையிலும் விஷாலுக்காக ராகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்திலிருந்து வந்து கலந்து கொண்டார் என்கிறார்கள். தங்களுக்கு போட்டியாக புதியவர் ஒருவர் வருவதால்தான் ஹன்சிகா, த்ரிஷா போன்றவர்கள் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வரவில்லையோ...?