ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
திரைநட்சத்திரங்கள், சினிமாவில் பிரபலமான பிறகு ஒரு சிலருக்கு அரசியல் ஆசையுடன் முதல்வர் கனவும் வந்து விடுகிறது. அந்த ஆசை இப்போது நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை, ஆம்., நமீதா அரசியலுக்கு வர இருக்கிறார். அவர் அதிமுக., கட்சியில் தன்னை இணைக்க இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு முறைப்படி கடிதமும் எழுதியுள்ளார். அதில் தங்களது(முதல்வர் ஜெயலலிதா) தலைமையில் நானும் என்னை இணைந்து கொண்டு எனது பங்களிப்பை தர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் அதிமுக.,வின் பிரசார கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக., வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்தக்கூட்டத்தின் போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தங்களை அதிமுக.,வில் இணைத்து கொள்ள இருக்கிறார்கள். அப்போது நடிகை நமீதாவும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுக., வில் இணைத்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.