ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பாபி சிம்ஹா- நடிகை ரேஷ்மி மேனன் திருமணம் இன்று குடும்பத்தார் முன்னிலையில் திருப்பதியில் மிக எளிமையாக நடந்தது. இந்த திருமணத்தில் தயாரிப்பாளர் எல்ரட் குமார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனனின் நெங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காதலில் சொதப்புவது எப்படி, பீசா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பாபி சிம்ஹா. இவரும் நடிகை ரேஷ்மி மேனனும் உறுமீன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று இவர்கள் திருமணம் எளிய முறையில் திருப்பதியில் இன்று நடந்தது. இதில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் யாரும் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. நடிகர்கள் சித்தார்த், கருணாகரன் ஆகிய பாபி சிம்ஹாவின் நண்பர்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.