Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னடத்தில் கால் பதிக்கும் அமலாபால்

21 ஏப், 2016 - 17:57 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-to-debut-in-Kannada-film

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்ற அமலாபால், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்தார். இருப்பினும் சூர்யாவின் பசங்க-2 படத்தில் நடித்தவர், அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாகிவிட்டார். தற்போது தமிழில் 'அம்மா கணக்கு' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் முதன்முறையாக இப்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்க இருக்கிறார் அமலாபால். கன்னட இயக்குநர் கிருஷ்ணன், 'நான் ஈ' சுதீப் கொண்டு 'ஹெப்புலி' என்ற படத்தை இயக்குகிறார். இதில் அமலாபால் தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சுதீப் ராணுவ வீரராகவும், அமலாபால் மருத்துவ கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தமாதம் முதல் துவங்குகிறது. மைசூர், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.


கன்னடத்தில் அறிமுகமாவது குறித்து அமலாபால் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ''கன்னடப்படத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறேன். ஒரு புதிய தொடக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது, இதை எண்ணும்போது உற்சாகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கன்னடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது, ஆனால் இந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப்படம் எனக்கு நல்லதொரு பெயரை பெற்று தரும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in