ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தில்வாலே' படத்தை ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஃபேன்'. ஒரு ஃபேனுக்கும், ஒரு ஸ்டாருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் படத்தின் ஒன்-லைன் கதை. இப்படத்தில் ஷாரூக்கான் ஒரு ஸ்டாராகவும், சாதாரண ஒரு ஃபேனாகவும் இரண்டு மாறுப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷாரூக்கானின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுநாள் வரை தன் கேரக்டரை பெரிதாக மாற்றி நடிக்காத ஷாரூக், இந்தப்படத்திற்காக கொஞ்சம் மெனகட்டிருக்கிறார். இதனால் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும் என நம்புகிறார் ஷாரூக், ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் ஷாரூக்கான் அழுதுவிடுவாராம்.
இதுகுறித்து ஷாரூக்கான் கூறியுள்ளதாவது... ''ஃபேன் படத்திற்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்றால், அவர்களிடமிருந்து நான் விருதை பறித்துவிடுவேன் இல்லையென்றால் அழுதுவிடுவேன் என்று கூறியுள்ளார்.
ஃபேன் படத்தில் ஷாரூக்கானின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டாலும் படத்தின் வசூல் சுமார் என்ற அளவிலே தான் இருக்கிறது. இப்படம் கடந்த ஐந்து நாட்களில் வெறும் ரூ.64 கோடி தான் வசூல் செய்திருக்கிறது.