Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 மில்லியனைக் கடந்த 24 டிரைலர்

19 ஏப், 2016 - 17:23 IST
எழுத்தின் அளவு:
24-Teaser-crossed-2-million

விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கும் '24' படத்தின் டிரைலர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தும், சூர்யா நடித்திருந்தும் இந்தப் படத்தின் டிரைலருக்கு எதிர்பார்த்த அளவிற்கு 'ஹிட்ஸ்' கிடைக்கவில்லை என்றே பார்க்கப்படுகிறது. விஜய், அஜித் நடிக்கும் படங்களின் டீசரும், டிரைலரும் வெளியான இரண்டு நாளில் 2 மில்லியனைக் கடக்கும் போது சூர்யாவின் '24' பட டிரைலர் 2 மில்லியனைக் கடக்க பத்து நாட்களை எடுத்துக் கொண்டுள்ளது.


டைம் மிஷின், சயின்ஸ் ஃபிக்ஷன் என பரபரப்பான ஒரு டிரைலராக இருந்தாலும் 'தெறி' ஜுரத்தில்தான் '24' படத்தின் டிரைலரை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களில் மட்டும் இந்த டிரைலரை பரபரப்பாக்கினால் எங்கேயோ போய்விடும் என்று கற்பனை செய்து கொண்டிருந்தவர்களுக்கும் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதனால் படம் வெளிவருவதற்குள் சமூக வலைத்தளங்களை மட்டும் நாடிக் கொண்டிருக்காமல் மற்ற வழிகளிலும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.


சூர்யாவின் போட்டியாளராகக் கருதப்படும் விக்ரமின் 'இருமுகன்' படத்தின் டீசர் ஒரு நாளைக்குள்ளாகவே 6 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்குக் கிடைக்கும் வரவேற்பு தற்போது குறைந்துள்ளதற்குக் காரணம் அவருடைய முந்தைய தோல்விப் படங்கள்தான் என்ற கருததே பரவலாக உள்ளது. இனியாவது, அவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in