ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டார் டிவியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தமிழ்ப்பதிப்பாக, சில வருடங்களுக்கு முன் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களே தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது. இந்நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியதால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிறகு இதே நிகழ்ச்சியை சில மாதங்கள் பிரகாஷ் ராஜும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சூர்யா, பிரகாஷ்ராஜ் இவர்களைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அமரும் 'ஹாட் சீட்'டிற்கு எதிரே அமர்ந்து இந்த நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார் அர்விந்த் சாமி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக அர்விந்த் சாமிக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்வதற்கு முன் விஜய், விக்ரம், சூர்யாவிடம் ஒரு ரவுண்ட் பேச்சுவார்த்தை நடத்தபட்டதாம். அவர்கள் மிகப்பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டதால் கடைசியில் அரவிந்த்சாமியிடம் பேசி இறுதி செய்துள்ளனர்.
ரோஜா படத்தில் அறிமுகமான அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தனி ஒருவன்' படம் மூலம் மீண்டும் களமிறங்கினார். அந்தப் படத்தில் அர்விந்த் சாமியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. தற்போது ஜெயம் ரவியுடன் 'போகன்' படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் அர்விந்த் சாமி. இவரின் இந்த புகழ் வெளிச்சத்தை தங்களின் நிகழ்ச்சிக்கு மிக சரியான நேரத்தில் பயன்படுத்த முடிவு செய்துவிட்டது விஜய் டிவி.