14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான வெள்ளாவி தேவதை டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா, ஆரம்பம் உள்பட சில தமிழ் படங்கிளில் நடித்தார். இங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் டாப்ஸி இந்தியில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ரன்னிங் சாதி டாட் காம், அமிதாப்பச்சன் நடிக்கும் பிங்க் படங்களில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்படும் டாப்ஸி மும்பையில் பலகோடி ரூபாயில் ஆடம்பர வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அவரே தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மும்பையில் இருக்கிறேன். ஓட்டலில் தங்குவதற்கு நிறைய செலவாகிறது. இதனால் மும்பை அந்தேரி பகுதியில் வீடு வாங்கி உள்ளேன். இந்த வீட்டின் ராசி எனக்கு இன்னும் வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று கூறியுள்ளார்.