Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னொரு இசையமைப்பாளரையும் இயக்கும் சசி

10 ஏப், 2016 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Sasi-directs-another-music-director

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ, டிஷ்யூம், 555, பிச்சைக்காரன் ஆகிய படங்களை இயக்கியவர் சசி. இதில் 555 படத்தின் தோல்வியினால் உடனடியாக படமில்லாமல் இருந்து வந்த அவரைத் தேடிச்சென்று பிச்சைக்காரன் படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. காரணம், அவரை டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் டைரக்டர் சசிதான். அந்த நன்றிக்கடனுக்காக தானே பிச்சைக்காரன் படத்தை தயாரித்து நடித்தார் விஜய் ஆண்டனி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து சசியின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.


பிச்சைக்காரனைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கும் சசி, அதற்கடுத்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்தையும் இயக்குகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆக்சன் கதையில் இயக்குகிறாராம் சசி. பிச்சைக்காரனிலேயே ஆக்சனுக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்த அவர் ஜி.வி.பிரகாஷை அதிரடியான ஆக்சன் காட்சிகளிலும் நடிக்க வைக்கிறாராம். புருஸ்லீ , எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை முடித்து விட்ட ஜி.வி.பிரகாஷ், கடவுள் இருக்கான் குமாரு படத்தை முடித்ததும் சசி இயக்கும் படத்தில் நடிக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in