தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திர கிரிக்கெட்டை நடத்த உள்ளனர். இதற்கு ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த திரைப்பட நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்திருப்பது மட்டுமல்ல, தாங்களும் கலந்து கொள்வதாக மனமுவந்து தெரிவித்துள்ளனர். திரையுலகத்தில் யாருடனும் ஒட்டாமல் தனித்தீவுபோல் இருந்து வரும் அஜித் மட்டும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், நடிகர்களே தங்களுடைய சொந்தப்பணத்தைப் போட்டு நடிகர் சங்கக்கட்டிடத்தை கட்ட வேண்டும் என்றும் தன் பங்காக 10 லட்சம் தருவதாகவும் அஜித் சொல்லி இருப்பதாக தகவல் வெளியானது.
தன்னுடைய எதிர்ப்பையும் 10 லட்சம் தருவதாக சொன்னதையும் நேரடியாக அறிக்கையாகவோ... பத்திரிகையில் பேட்டியாகவோ அஜித் சொல்லவில்லை. தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலமும் இந்தக் கருத்தை அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, அவரது பி.ஆர்.ஓ. வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் வேறு ஒரு நபர் மூலம் இந்த தகவல் கசியவிடப்பட்டது.
அதாவது, முன்னணி வார இதழில் பணியாற்றிவிட்டு தற்போது பிளாக்கில் எழுதிவரும் தன் அபிமானி ஒருவரிடம் இந்த விஷயத்தை அஜித் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த முன்னாள் நிருபர்தான் அஜித் சொன்ன விஷயங்களை வாட்ஸ்அப்பில் பரப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த கருத்து நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.
ஆதரவு இல்லை : முன்னணி நடிகர்களின் சொந்தப் பணத்தில் இருந்தே கட்டிடம் கட்ட தேவையான 26 கோடியை புரட்டி நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்ட முடியும். ஆனால் இதை விஷால் உட்பட சங்க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லையாம். இது குறித்து செயற்குழுவில் பேசப்பட்டபோது இதற்கு செயற்குழு உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஈகோ பிரச்னை வரும் : காரணம்... முன்னணி நட்சத்திரங்களிடம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டினால், தங்களின் வசதி வாய்ப்பு மற்றும் நிதிநிலைமைக்கு ஏற்றவாறு ஆளுக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள். அப்படி வாங்கும்போது அதிக தொகையை ஒரு நடிகர் கொடுத்துவிட்டு தன் இமேஜை உயர்த்திக் கொள்வார். மற்றவர்களைவிட நான் பெரிய ஆள் பெரிய வள்ளல் என்று ஒருவேளை அவர் காட்டிக்கொண்டால் அது மற்ற நடிகர்களின் ஈகோவை பாதிக்கும்.
நட்சத்திர கிரிக்கெட் : இந்த பிரச்சனையை தவிர்க்க குறிப்பிட்ட தொகையை ஃபிக்ஸ் பண்ணி இந்தத் தொகையை அனைவரும் தர வேண்டும் என்று சொல்வதும் சட்டவிரோதம். நன்கொடையை இப்படி கெடுபிடி செய்து வாங்கக் கூடாது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே நன்கொடை வாங்காமல் கிரிக்கெட்போட்டி நடத்தி பணத்தை ஈட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை 7.5 கோடிக்கு முன்னணி சேனலுக்கு விற்றுவிட்டனர். டிக்கெட் கட்டணம், ஸ்பான்ஸர் போன்ற பிற வருவாய் மூலம் 2 கோடியை திரட்ட முடியும் என்றும் நம்பிக்கையில் உள்ளனர்.
ரஜினி-கமல் நடிப்பில் பொன்னியின் செல்வம் நாடகம் : நட்சத்திர கிரிக்கெட்டுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் நாடகத்தை வெளிநாடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். நாடக ப்ரியரான நாசர்தான் இந்த யோசனையை சொல்லி இருக்கிறார். பொன்னியின் செல்வன் நாடகத்தில் ரஜினி, கமல் இருவருமே நடிக்க உள்ளனர். இதன் மூலம் 20 கோடியை திரட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளனர்.
சம்பளமின்றி ஒரு படம் : அதன் பிறகு விஷால், கார்த்தி இருவரும் சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட வழங்கப்படும். இத்தனைக்குப் பிறகும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட பணம் தேவைப்பட்டால், நட்சத்திரங்களிடம் நன்கொடை பெறுவதைப் பற்றி பரிசீலனை செய்யப்படுமாம்.
அதே நேரம் 99.9 சதவிகிதம் உறுப்பினர்களிடம் நன்கொடை வாங்காமலே சங்கக்கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறாராம் விஷால். அப்படி செய்தால் மட்டுமே தன்னுடைய பெயர் நிலைத்து நிற்கும் என்பது விஷாலின் கணக்கு.
மொத்தத்தில், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு....!