ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக வருகிற 17ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. ஹாங்காங் 6 என்ற விளையாட்டு முறையில் போட்டிகள் நடக்கிறது. அதாவது ஒரு அணிக்கு 6 வீரர்கள் விளையாடுவார்கள், 6 ஓவர்தான் விளையாடுவார்கள். இதில் 8 அணிகள் விளையாடுகிறது. அந்த அணிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன்களும் வருமாறு:
ராம்ராஜ் “சென்னை சிங்கம்ஸ்” அணிக்கான கேப்டனாக சூர்யா அறிமுகப்படுத்தப்பட்டார். எஸ்தெல் மதுரை காளைஸ் அணிக்கான கேப்டனாக விஷால், சக்தி மசாலா கோவை கிங்ஸ் அணிக்கான கேப்டனாக கார்த்தி, எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி “நெல்லை டிராகன்ஸ்” அணிக்கான கேப்டனாக ஜெயம்ரவி, ராம்நாட் ரைனோஸ் அணிக்கான கேப்டனாக விஜய் சேதுபதி, “தஞ்சை வாரியர்ஸ்” அணிக்கான கேப்டனாக ஜீவா, சேலம் சீட்டாஸ் அணிக்கான கேப்டனாக ஆர்யா, கல்யாண் ஜூவல்லர்ஸ் "திருச்சி டைகர்ஸ்" அணிக்கான கேப்டனாக சிவகார்த்திகேயன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு அணியிலும் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.