Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும், ரஜினியும் நடிக்காததற்கு இதுதான் காரணம் - கமல்!

04 ஏப், 2016 - 17:29 IST
எழுத்தின் அளவு:
Kamal-replied-why-he-did-not-act-with-Rajini-again

தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரீஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது.


விருதை பெற்றுக்கொண்ட கமல், அங்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது... இந்த விருதை பெற நான் தகுதியுள்ளவனா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விருது எனக்கும் கிடைத்தது மகிழ்ச்சியாகவும், வியப்பாக இருக்கிறது. என்னுடைய படங்களில் பிரெஞ்சு சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கும். இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை, மற்றவர்களுக்கு விருது கிடைத்தது வாழ்த்துக்கள். மணிரத்னத்துடன் எப்போது மீண்டும் இணைய போகிறேன் என்று தெரியவில்லை, அவருக்கு நல்ல நடிகர்களும், நல்ல கதைகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நானும், அவரும் டைரக்ஷனில் பிஸியாக இருக்கிறோம். காலம் வரும்போது கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைவோம்.


நானும் ரஜினியும் இணைந்து நடிக்க சம்மதம் சொல்லி எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் சேர்ந்து நடிக்க முடியவில்லை, நாங்கள் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கியதே இந்த காரணத்திற்காகத்தான் என்றவர், மருதநாயகம் படம் பற்றி பேசும்போது, பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அமெரிக்காவில் கூட நிறைய பேர் கேட்க தொடங்கிவிட்டார்கள். இத்தனை காலம் பொறுமையாக இருந்துவிட்டேன், இன்னும் சிறிது காலம் நான் பொறுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல.


என்னுடைய அடுத்தப்படம் த்ரில்லர் ப்ளஸ் காமெடி படமாக இருக்கும். இது நான் என் மகள் ஸ்ருதியுடன் நடிக்கும் முதல்படமாகும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in