Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிரணியிலிருந்து ஓர் அணியில் போட்டியிடும் சரத்குமார், கருணாஸ்!

04 ஏப், 2016 - 14:03 IST
எழுத்தின் அளவு:
ADMK-allot-seat-to-Sarathkumar-and-Karunas

நடிகர் சங்க தேர்தலின் போது எதிரெதிர் அணியாக செயல்பட்ட சரத்குமாரும், கருணாஸூம், இப்போது ஓர் அணியில் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கின்றனர். தமிழகத்தில் வருகிற மே மாதம் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் பலமுனை போட்டி நடப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.


ஒவ்வொரு கட்சியும் பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த வண்ணம் உள்ளது. மற்றொருபக்கம் சினிமா நடிகர்களையும் தங்கள் கட்சியில் களம் இறக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சில நடிகர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை சில கட்சிகளில் இணைத்து கொண்டு வருகின்றனர். விசு, விஜயகுமார் ஆகியோர் பா.ஜ.விலும், ஆர்.சுந்தர்ராஜன் அதிமுக.,விலும் தங்களை இணைத்து கொண்டனர்.


இந்நிலையில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கருணாஸ், சினிமாவில் மட்டுமல்லாது, முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நிர்வகித்து, அதன் தலைவராகவும் இருக்கிறார். இவர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு பற்றி எடுத்து கூறினார். அதோடு, தங்களது கட்சி சட்டசபை தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில் அதிமுக., சார்பில் இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கருணாஸூக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அதிமுக., கூட்டணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.


இதேப்போன்று நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருப்பதுடன், தற்போது தென்காசி தொகுதி எம்எல்ஏ.,வாகவும் இருக்கிறார். இவர் மீண்டும் அதிமுக., கூட்டணியில் இணைந்து வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறார். இன்று வெளியிடப்பட்ட அதிமுக., வேட்பாளர் பட்டியலில் ச.ம.க.,க்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட இருக்கிறார்.


ஆக நடிகர் சங்க தேர்தலின் போது எதிரெதிர் அணியாக இருந்து போட்டியிட்ட சரத்குமாரும், கருணாஸூம், இப்போது அதிமுக., கூட்டணியில் ஓரணியாக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in