ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் மற்றும் கானா பாடகராக இருந்த கருணாஸ், பாலாவின் நந்தா படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
காமெடி நடிகர் சுந்தர்ராஜன் அதிமுக.,வில் நேற்று இணைந்துள்ள நிலையில், இன்று கருணாசும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக.,வில் இணைந்தார். அதிமுக.,வுடன் தனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பையும் இணைத்துக் கொண்டார். போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக.,விற்கு ஆதரவு அளிக்க உள்ளேன். சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி, 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.