ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் தோழா. நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். வம்சி படையபள்ளி இயக்கி உள்ளார். இந்த படம் 2011ம் ஆண்டு பிரான்சில் வெளிவந்த 'தி இன்டச்சபிள்' என்ற படத்தின் ரீமேக். பிவிபி சினிமா முறைப்படி உரிமம் பெற்று தயாரித்துள்ளது.
உலக புகழ்பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் தமிழிலும் வெற்றி பெற்றிருப்பது படத்தை தயாரித்த பிரான்சு நிறுவனமான கவுமண்ட் சினிமாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் வெற்றிக்கு அது தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 120 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்த நிறுவனம். தி இன்டச்சபிள் படத்தை தங்களது பெருமைமிகு தயாரிப்பாக முன்னர் அறிவித்தது. இப்போது அது தோழாவையும் பாராட்டி உள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பிவிபி சினிமா ரீமேக் உரிமம் பெற்றுத் தந்த குநீத் மோங்காவுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.