Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் 'சொல்வதெல்லாம் உண்மை' பேசுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்

28 மார், 2016 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-again-to-host-Solluvethallam-Unmai

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. முதலில் நிர்மலா பெரியசாமி நடத்திய இந்த நிகழ்ச்சியை அதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தினார். லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை நடத்திய விதம் அனைவருக்கும் பிடித்துப்போனதால் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறியது. பின்னர் சேனலுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன் பிறகு நிகழ்ச்சியை சுதா சந்திரன் நடத்த ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வாக்கியத்தை வைத்து விஜய் டி.வி ஒரு கேலி நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்ப அது வைரலாக பரவியது. இது நிகழ்ச்சிக்கு பிறகு அந்த வாக்கியம் பிரபலமானது.


பல படங்களில் காமெடியாக பயன்படுத்தினார்கள். முன்னணி ஹீரோக்கள் பேசினார்கள். சிவகார்த்திகேயன் பாட்டாக பாடினார். அந்த வாக்கியத்தை கொண்டு ஒரு படத்தின் தலைப்பே வைத்திருக்கிறார்கள். இப்போது அரசியல் கட்சிகள் தங்கள் விளம்பரத்தில் பயன்படுத்துகிறார்கள்.


இந்த நிலையில் சுதா சந்திரன் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அதன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தது. வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பான நிகழ்ச்சி 2 நாளாக குறைந்தது. இதனால் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனையே நிகழ்ச்சியை நடத்த அழைத்துள்ளது ஜீ தமிழ் சேனல். அவரும் சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பல புதிய அம்சங்களுடன் மீண்டும் களம் இங்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பிரமாண்ட விளம்பரங்களுடன் மீண்டும் நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கிறது சேனல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in