ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளம் இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கின்றனர்.
எனவே நடுத்தர பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் புதிய இசையமைப்பாளர்களை தேட ஆரம்பித்துவிட்டனர்.
சின்ன பட்ஜெட்டில் நடிகர் சித்தார்த் நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான படம் 'ஜில் ஜங் ஜக்'.
இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர்.
இவர் இசையமைத்த சூட் த குருவி பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இதையடுத்து, 'ஆறாது சினம்' படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து இயக்கும் படத்துக்கு விஷால் சந்திரசேகரை இசையமைப்பாளராக கமிட் பண்ணி இருக்கிறார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அருண் விஜய்யின் Ice-In Cinemas Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் தவிர வேறு சில படங்களுக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் வெளியாகவிருக்கும் 'சவாரி' படத்துக்கும் விஷால் சந்திரசேகர்தான் இசை அமைத்திருக்கிறார்.