ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் மாபெரும் வெற்றி படம் கிக். இப்படம் பாலிவுட்டிலும் சல்மான் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் தெலுங்கில் கிக்-2 படம் வெளியானது. ஆனால் முதல்படம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இப்போது கிக்-2 படமும் பாலிவுட்டில் உருவாக இருக்கிறது. முதல்படத்தில் நடித்த சல்மானே, கிக்-2விலும் நடிக்கிறார். சாஜித் நாடியாவாலாவே இப்படத்தையும் தயாரிக்கிறார். ஆனால் இப்படத்தின் கதையை புதிதாக உருவாக்கி வருகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சாஜித் கூறியுள்ளதாவது... தற்போது நாங்கள் தீவிரமாக கதை எழுதி வருகிறோம். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதை இன்னும் வலுவாக இருக்கும். சல்மான் ஏற்கனவே கிக்-2வில் வேறு ஒரு நடிகையைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆகையால், ஜாக்குலின் கிக்-2வில் நடிக்க மாட்டார். எமி ஜாக்சன், சோனாக்ஷி, கிருத்தி சனோன் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம். கிக்-2 படத்தை அடுத்தாண்டு துவங்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.