Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோ கிடைக்காமல் தவிக்கும் கே.வி.ஆனந்த்

13 மார், 2016 - 14:01 IST
எழுத்தின் அளவு:
K.V.Anand-searching-hero

'அயன், கோ' என்ற இரண்டு அட்டகாசமான கமர்ஷியல் படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய 'அனேகன்' படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வித்தியாசமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஹீரோ கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதிதான் ஆனந்த் இயக்கப் போகும் அடுத்த படத்தின் ஹீரோ என செய்திகள் பரவி வருகின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்யா உட்பட சில ஹீரோக்கள் தாமாக முன்வந்து வாய்ப்பு கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், தான் எதிர்பார்க்கும் வகையிலான ஹீரோ கிடைக்கவில்லை என படத்தை கே.வி.ஆனந்த் தாமதப்படுத்தி வந்தார். இடையில் சிவகார்த்திகேயன் கூட அந்த ஹீரோ கிசுகிசுவில் அடிபட்டார். ஆனால், இருவருமே அந்த வதந்தியை மறுத்தனர்.


கடந்த சில நாட்களாக வந்த கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி கூட்டணி பற்றிய செய்தியை இருவருமே இன்னும் மறுக்கவில்லை. விஜய் சேதுபதி தற்போது 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் தயாரிக்க உள்ள படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கலாம். அதனால் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது நடக்குமா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். யாராவது ஒருவர் கால்ஷீட் விட்டுக் கொடுத்தால் இந்த கூட்டணி உருவாக வாய்ப்புண்டு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in