Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர்களுக்கு குறும்படங்கள் தான் சான்று : ஆர்யா

11 மார், 2016 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Short-films-are-certificate-to-Directors-says-Arya

ராடான் நிறுவனம் நடத்திய குறும்பட திருவிழாவில் இறுதி சுற்றுக்கு தகுதியான படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. உலக அளவிலான போட்டியில் அகதிகளாக செல்லும் குழந்தைகள் பற்றிய படமான 'ஓடம்' முதல் இடத்தையும், 'நிழல்' என்ற திகில் படம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனை அஞ்சலி இயக்கி இருந்தார். அவருக்கு விருதை ஆர்யா வழங்கினார்.


பின்னர் விழாவில் ஆர்யா பேசியதாவது... ''குறும்படம் எடுப்பது வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர்களுக்கு அவசியமான ஒன்று... அதைவிட்டு விட்டு மூணு மணி நேரம் கொடுங்க முழுக்கதையும் சொல்கிறேன் என்று கேட்பது எரிச்சலை உண்டாக்கும்.... பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிபிகேட் தேவைப்படுறது. அப்படி இருக்கும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை இயக்க குறும்படம் தான் சர்டிபிகேட்..." என்றார்.


இந்திய அளவில் இறுதிச்சுற்றுக்கு, ஒரு தெலுங்கு படத்துடன் ஐந்து தமிழ்ப்படங்கள் தேர்வாகியிருந்தன. ஜிகே இயக்கிய அசரீரி முதல் இடமும், விவேக் - மனோ இயக்கிய தடை மற்றும் அஞ்சலி இயக்கிய இறுதிவரை ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. இறுதிச்சுற்று நடைபெறும் முன்னரே தெலுங்கில் குறும்படம் இயக்கியவருக்கு படம் இயக்க வாய்ப்புக் கிடைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.



விழாவில் ராதிகா சரத்குமார், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்க்குனர் பாலாஜி மோகன், கே.பாக்யராஜ், நடிகை லிஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in