ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அனிருத், யுவன் சங்கர் ராஜா காதல் பாடல் வெளியிட்டனர். வருகிற மார்ச் 8ந் தேதி உலக மகளிர் தினம். இதை கொண்டாடும்
விதமாக 'மை டே தி சன்' என்ற பெயரில் ஸ்ருதிஹாசன் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார். இந்த ஆல்பத்தின் பாடலை ஸ்ருதிஹாசனே எழுதி பாடியிருக்கிறார். விஸ்வரூபம் படத்திற்கு இசை அமைத்த யேசான் மற்றும் லாய் இசை அமைத்துள்ளனர்.
“ஆல்பத்தின் பாடலை எழுதும்போதே இது உலக பெண்களின் மனக்குரலாய் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல், போராட்ட குணத்தை தருவதாக இந்த பாடல் இருக்கும். ஒரு பெண்ணாக இதை எழுதி பாடுவதில் எனக்கு மகிழ்ச்சியும் மன திருப்தியும் ஏற்பட்டிருக்கிறது. என் இதயத்தின் குரலாய் ஒலித்த பாடல் பெண்களின் குரலாய் ஒலிக்கும்” என்கிறார் ஸ்ருதிஹாசன்.