ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிரிக்கெட், கபடி என சில விளையாட்டுகளை மையமாக வைத்து படங்கள் வந்திருப்பதைத் தொடர்ந்து தற்போது ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து ஹாக்கி என்ற படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் விந்தை, விழா படங்களில் நடித்த மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். நடிகை சுகாசினியின் தங்கையான இந்திரா பட நாயகி அனுஹாசன் ஹாக்கி அணியின் கோட்சாக நடித்துள்ளார்.
மேலும், தற்போது லண்டனில் குடியிருக்கும் அனுஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பல மாதங்களாக சென்னை வந்திருந்து நடித்தவர், தான் படித்த காலங்களிலேயே ஹாக்கி விளையாட்டில் ஆர்வமாக கலந்து கொண்டு வந்ததால் அதே பழைய எனர்ஜியை கொண்டு வந்து இந்த ரோலில் நடித்திருக்கிறாராம். குறிப்பாக, இந்த படத்தில் இந்தியன் ஹாக்கி டீமைச்சேர்ந்த சில முன்னணி வீரர்களும் சில காட்சிகள் ஹாக்கி விளையாடுவது போலவே நடித்துள்ளார்களாம். அந்த காட்சிகளை பெங்களூரில் உள்ள ஒரு ஹாக்கி மைதானத்தில் படமாக்கியுள்ளனர்.