ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தநிலையில், கடைசியாக அவர் இயக்கிய மாசு (எ) மாசிலாமணி படு தோல்வியடைந்தது. அதனால் அவரை வைத்து படம் தயாரிக்க திட்டமிட்ட நிறுவனங்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டன. எனவே வேறுவழியில்லாமல் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் வெங்கட்பிரபு. அவரது பட நிறுவனத்தில் பெயர் என்ன தெரியுமா? பிளாக் டிக்கெட். தன்னுடைய பட நிறுவனமான பிளாக் டிக்கெட் சார்பில் தயாராகவிருக்கும் முதல் படம் - சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம்.
கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் என்பதால் சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. மாசு (எ) மாசிலாமணி படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. இப்படத்தில் மீண்டும் தனது சென்னை 28 படத்தில் நடித்த நாயகர்களோடு இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார். அதே நேரம் மார்க்கெட் இல்லாத நடிகர்களை கழற்றிவிட்டுவிட்டு பிசினஸ் வேல்யூ உள்ள சிலரையும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.
சொந்தப்படமாச்சே... இந்த உஷார்த்தனம் கூட இல்லைன்னா எப்படி?