விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
நடிகர் திலகம் சிவாஜி, வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம் ராஜன், நடித்த 'சிவகாமியின் செல்வன்' 1974ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார்.
இனியவளே என்று பாடி வந்தேன்...., மேளதாளம் கேட்கும் நேரம் பெண் பார்க்க வந்தேனடி..., எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது..., ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு..., என்பது போன்ற தேனினும் இனிய பாடல்களை கொண்டது. சிவாஜி இருவேடங்களில் நடித்திருந்தார். இது ஒரு விமானபடை வீரனின் கதை.
தற்போது இந்தப் படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நவீன ஒலி அமைப்பு, வண்ணங்கள் மெறுகேற்றல், ஆகியவற்றுடன் அகன்ற திரைக்கும் மாற்றப்பட்டுள்ளது. மதுரை சிவா மூவீசும், ஸ்ரீசூர்யா மூவீசும் இணைந்து இதனை வெளியிடுகிறார்கள். சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.