Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்டவன் கட்டளையில் விஜயசேதுபதி பாடுகிறாரா? - கே

26 பிப், 2016 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Is-Vijaysethupathi-singing-in-Aandavan-Kattalai---Music-Director-K-Reply

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கே. அந்த படத்தில் இவர் இசையில் உருவான, ''கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா...'' -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து, முகமூடி, ஆரோகனம், காடு, கிருமி என பல படங்களுக்கு இசையமைத்த அவர், தற்போது 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்திற்கான பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டுள்ளார்.


இந்த படத்திற்கு தான் கொடுக்கப்போகும் இசையைப்பற்றி கே கூறுகையில், எனது ஒவ்வொரு படங்களிலுமே ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. பாடல்களுக்கு புதிய இசைக்கருவி கொண்டு இசையமைப்பேன். அந்த வகையில், இந்த ஆண்டவன் கட்டளை படம் எனது திறமைக்கு தீனி போடும் வித்தியாசமான கதையாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் ஆண்டவன் கட்டளை என்று பழைய தலைப்பாக இருந்தபோதும் கதை இன்றைய இளவட்டங்களுக்கு பிடித்தமானதாக உள்ளது. காக்கா முட்டை படம் போன்று இந்த கதைக்குள்ளும் காமெடி இருக்கும்.


ஆக, எனக்கு பாடல் மட்டுமின்றி பின்னணி இசையமைப்பதற்கு சவாலான விசயங்கள் நிறைய உள்ளது. தற்போது பத்து பாடல்களை கம்போஸ் செய்து விட்டேன். அத்தனை டியூன்களுமே இயக்குனர் மணிகண்டனுக்கு பிடித்து விட்டது. என்றாலும், அதிலிருந்து ஐந்து டியூன்களை அவர் ஓகே செய்வார். அப்படி அவர் செலக்ட் பண்ணும் டியூன்களுக்கு இசையமைக்கும்போது திரைப்படங்களில் அதிகமாக பயன்படுத்தப்படாத கிராமத்து இசைக்கருவிகளை பயன்படுத்தப்போகிறேன். அதற்காக தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள கிராமிய பாடகர்கள் பயன்படுத்தி வரும் சில இசைக்கருவிகளை கொண்டு வந்து ஆண்டவன் கட்டளை பாடல்களுக்கு பயன்படுத்தப்போகிறேன்.


அதோடு கிராமப்புறங்களில் பாடிக்கொண்டிருக்கும் வித்தியாசமான குரல்வளம் கொண்ட பாடகர் பாடகிகளையும் இந்த படத்தில் பாட வைக்கிறேன். ஐந்து பாடல்களில் இரண்டு பாடல்களுக்கு இந்த மாதிரி கிராமத்து சாயலில் இசையமைக்கிறேன். மேலும், சமீபகாலமாக ஹீரோக்களும் பின்னணி பாடி வருவதால் இந்த படத்தில் விஜயசேதுபதியை பாட வைக்கலாம் என்கிற ஆசை எனக்குள் இருந்தபோதும், இயக்குனர் மணிகண்டன் இன்னும் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சம்மதித்தால் விஜயசேதுபதியை இந்த படத்தில் பாட வைப்பேன். அவர் ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நன்றாகவே பாடி யிருந்தார்.


மேலும், இந்த ஆண்டவன் கட்டளை படம் புதுமையான கதைக்களம் என்பதால் எனது திறமையை வெளிச்சம் போட நல்ல வாய்ப்பு என்று கருதுகிறேன். அதனால் இந்த படம் எனது திரைப்பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறும் இசையமைப்பாளர் கே, நான் இதுவரை இசையமைத்ததில் இது எனக்கு பிரமாண்ட படம் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in