ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களையும் திரட்டி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த கிரிக்கெட்டி போட்டி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ், தேவிகா, சந்திரிகா நடித்திருக்கும் அவன் அவள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க வளாகத்துக்கு வந்த நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால் பத்திரிகையாளர்களிடம் பேசினார்...
"நடிகர் சங்கத்திடம் 48 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. மேற்கொண்டு 2 கோடி ரூபாய் கடன் வாங்கி மொத்தம் 2 கோடியே 48 லட்ச ரூபாயை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்திடம் கொடுத்து நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டிருக்கிறோம். தற்போது அதில் கட்டிடம் கட்டுவதற்காக முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. கட்டிடம் கட்ட முதற்கட்டமாக தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.”
இவ்வாறு விஷால் கூறினார்.