மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி நடித்தவர் ஹன்சிகா. அதனால் குறுகிய காலத்தில் பேசப்படும் நடிகையாகி விட்டார். அந்த வகையில், ரோமியோ ஜூலியட், வாலு படங்களைத் தொடர்ந்து ஜீவாவுடன் அவர் நடித்துள்ள போக்கிரிராஜா படம் வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இதையடுத்து மனிதன் உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. அதோடு சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்காகவும் முயற்சித்து வரும் ஹன்சிகாவுக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் தற்போது ஏற்பட்டுள்ளதாம். மார்க்கெட் ஓரளவு இருக்கும்போதே அவருடனும் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படும் ஹன்சிகா, அடுத்தபடியாக அஜித்தை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களை தொடர்பு கொண்டு சான்சும் கேட்டு வருகிறாராம். அவரது முயற்சிக்கு இதுவரை கிரீன் சிக்னல் விழவில்லை என்றாலும், அஜித் படவாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் ஹன்சிகா.