ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமி மேனனை பற்றி, ஏதாவது வதந்தி பரவுவதும், அதை, அவர் மறுப்பதும், வழக்கமாகி விட்டது. 'சினிமாவுக்கு லட்சுமி மேனன் முழுக்கு போட போகிறார்' என, சமீபத்தில் செய்தி பரவியது. உடனடியாக இதை மறுத்த லட்சுமி, 'எனக்கு, 19 வயது தான் ஆகிறது; இன்னும், 10 ஆண்டுகளுக்கு சினிமாவில் இருப்பேன்' என, மறுப்பு வெளியிட்டார். இந்த வதந்தி அடங்குவதற்குள், அடுத்த வதந்தி ரெக்கை கட்டி பறந்தது. 'லட்சுமி மேனன், சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துவிட்டார்' என்ற செய்தி தான், அது. பதறிப் போன லட்சுமி, 'டுவிட்டராவது, ஒன்றாவது, அதைப் பற்றி, எனக்கு எதுவுமே தெரியாது' என, மறுப்பு வெளியிட்டார். இந்த பரபரப்புக்கு இடையே, ஜெயம் ரவியுடன், அவர் நடித்துள்ள, மிருதன் படம், வெளியாக தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து, விஜயசேதுபதிக்கு ஜோடியாகவும், ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார், லட்சுமி மேனன்.