ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ரஜினிகாந்த் நடிக்க '2.0' படத்தையும், கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தையும் மற்றும் “எமன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு” ஆகிய படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் படங்களையும் தற்போது வினியோகித்து வருகிறது. 'விசாரணை' படத்தை இந்த நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பாராட்டியதை வைத்து படத்திற்கு விளம்பரமும் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிப்பதால் 'விசாரணை' படத்தைப் பற்றிப் பாராட்டியிருக்கிறார்கள். அதே போல மற்ற நல்ல படங்களையும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பாராட்டுவார்களா என கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த எந்த ஒரு படத்தையும் அவர்கள் பாராட்டியதாகத் தெரியவில்லை. தமிழில் பல புதியவர்கள் நல்ல படங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்தால் அந்தப் படங்கள் ரசிகர்களிடம் சென்றடைய நல்ல வாய்ப்பாக இருக்கும். தங்களுக்கு பெரிய சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை மட்டும் பாராட்டுவது ஏற்புடையதல்ல என்ற கருத்தே பல உதவி இயக்குனர்களிடமும் பொதுவாக இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் டிவிட்டரிலும் இருக்கிறார்கள். இனியாவது, டிவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள்ளாவது நல்ல படங்களைப் பாராட்டி அவர்கள் கருத்துக்களைப் பதிய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.