நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? |
எந்த காலத்திலும் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி வந்த கமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் மூலம் வந்த 10 கோடி ரூபாயை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அளித்தாக செய்திகள் வெளிவந்தது. அதை அந்த நிறுவனம் மறுத்தது. கடனை அடைக்க நடித்தார் என்ற செய்தி அடுத்து வந்தது. இது எதையும் கமல் மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இப்போது முதன் முறையாக அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
விளம்பர படத்தில் நடித்த பணம் பலரின் உதவிக்குத்தான் போய்கொண்டிருக்கிறது. கொடுத்ததே தெரியாமல் செய்ய வேண்டும் அதுதான் பெரிய விஷயம். நானும், ஒரு பத்திரிக்கை அதிபரும் இணைந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறோம். அதன் மூலம் பல விஷயங்கள் செய்கிறோம். அதனை யார் செய்வது என்பது தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 7 ஆயிரம் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறோம். அவர்கள் இப்போது கல்லூரி செல்லும் வயதுக்கு வந்திருக்கிறார்கள். சிலர் திருமண வயதை எட்டியிருக்கிறார்கள். குடும்பம் பெரிதாகிவிட்டது. அவர்கள் யார் என்பதை போட்டோ போட்டு விளம்பரபடுத்த முடியாது. அதனால் வாங்கிய காசையும் செய்த செலவை மட்டுமே கூறமுடியும்.
இதுவரை என் ரசிகர்கள் 20 கோடிக்கு மேல் தங்கள் சொந்த காசை போட்டு நற்பணி செய்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா? அதற்குத்தான் விளம்பர படத்தில் நடித்தேன். சினிமாவில் சம்பாதித்து செய்வது கடினம். அதனால்தான் விளம்பரத்தில் நடித்து அந்த பணத்தை திருப்பி விட்டேன். கமல் விளம்பர நடிகர் என்ற பெயர் வந்து விடாத அளவிற்கு, தேவைப்பட்டால் இனியும் விளம்பரத்தில் நடிப்பேன் என்கிறார் கமல்.