ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல்ஹாசன் அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதனால் அவர் நடிப்பதாக இருந்த 'அம்மா அப்பா ஆட்டம்' படம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் 'அப்பா அம்மா ஆட்டா' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பை 'தூங்காவனம்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது கமல்ஹாசனே வெளியிட்டார். அவருடைய ஜோடியாக அமலா நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இந்தப் படத்தை கமல்ஹாசன் நடித்த 'சாணக்யா' என்ற மலையாளப் படத்தை இயக்கிய ராஜீவ் குமார் இயக்க உள்ளார் என்றும் சொன்னார்கள். ஆனால் திடீரென இந்தப் படத்தைத் தயாரிக்கும் திட்டம் தள்ளிப் போடப்பட்டுவிட்டது. கமல்ஹாசன் முதலில் லைக்கா நிறுவனத்தின் படத்தில் நடித்துவிட்டுத்தான் இந்தப் படத்திற்கு வருவார் என்கிறார்கள். இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டதா அல்லது அப்படியே கிடப்பில் போடப்பட்டதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.