ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னையின் பிரபலமான டாக்டர் சேதுராமன். தோல் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர். பல முன்னணி நடிகர், நடிகைகளின் பேமிலி டாக்டர். காமெடி நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். சந்தானம் ஹீரோவாக நடித்த 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார். தற்போது வாலிபராஜா படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். பீடா என்ற படத்திலும் நடித்து வருகிறார். டாக்டராகவும், ஆக்டராகவும் இருக்கும் சேதுவிற்கு திருமணம் நடக்க இருக்கிறது.
புதுவயலைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளர் உமையாள் என்கிற உமாவுக்கும், டாக்டர் சேதுராமனுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற 12ந் தேதி புதுவயலில் உள்ள மணமகள் இல்லத்தில் நடக்கிறது. 21ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். வரவேற்பில் திரையுலக பிரமுகர்களும், டாக்டர்களும் கலந்து கொள்கிறார்கள்.