Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தோழா' படப்பிடிப்பு நிறைவு

04 பிப், 2016 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Thozha-shooting-over

தமிழில் 'தோழா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற பெயரிலும் ஒரே சமயத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் நிறைவடைய உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தமிழ் நடிகரான கார்த்தி முதல் முறையாக ஒரு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கும் படம் இது. நாகார்ஜுனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் இது.


'தி இன்டச்சபிள்ஸ்' என்ற பிரெஞ்சுப் படத்தின் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய ஊர்களில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிற்கும் சென்று சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.


'சிறுத்தை' படத்திற்குப் பிறகு கார்த்தி, தமன்னா இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். தமன்னா 'தோழா' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டார். தற்போது தென்காசியில் 'தர்மதுரை' படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார்.


மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர், 'தோழா' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் 25ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in