ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'எடாகி என்டர்டெயின்மென்ட்' என்ற தனது நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் முதன் முதலாக தயாரித்துள்ள படம் 'ஜில் ஜங் ஜக்'. குறும்பட இயக்குநரான தீரஜ் வைத்தி என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் ஒரு புதுமை உண்டு. என்ன?
ஜில் ஜங் ஜக் படத்தில் கதாநாயகி கிடையாது. கதாநாயகி இல்லாமல் மூன்று இளைஞர்களை சுற்றிச் சுழலும் வித்தியாசமான ஒரு கதையாம் இது.
'கதாநாயகி இல்லாமல் படமா?'
“இந்த கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. இந்த கதையில் கமர்ஷியல் விஷயத்துக்காக ஒரு கதாநாயகி கேரக்டரை திணிப்பதாக இருந்தால் அது இந்த கதைக்கு நான் செய்யும் துரோகமாக தான் இருக்கும். ஆனால கதாநாயகி இல்லாத குறை தெரியாத அளவுக்கு படம் படு ஜாலியாக செல்லும். அதுமாதிரியான ஜாலியான, காமெடியான ஒரு ஸ்கிரிப்ட் இந்த 'ஜில் ஜங் ஜக்'.” என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் கம் ஹீரோவான சித்தார்த்.
ஜில் ஜங் ஜக் என் தலைப்பு ஏன்?
''இப்படத்திற்கு 'ஜில் ஜங் ஜக்' என்று டைட்டில் வைத்ததும். 'இது என்ன தலைப்பு?' என்று நிறைய பேர் கேட்டார்கள். இப்படத்தில் வரும் முக்கியமான மூன்று கேரக்டர்களின் பெயர்கள் அது! இப்போது இந்த தலைப்பு மிகவும் பிரபலமாகி விட்டது.” என்றும் சொல்கிறார்.