ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிக்கு எதிராக நடித்த வில்லன்களை விட அவருக்கு எதிராக 'படையப்பா' படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று வரை பேசப்படும் நடிகையாக இருக்கிறார். அந்த 'நீலாம்பரி' கதாபாத்திரம் போல் வேறு யாரும் இதுவரை அவர்களது நடிப்பில் பிரகாசிக்கவில்லை. தெலுங்குடன் ஒப்பிடும் போது தமிழில் அதிகப் படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவில்லை என்றாலும் 'படையப்பா' படம் ஒன்றே அவருடைய பல படங்களுக்கு சமமாக அமைந்தது.
கமல்ஹாசனுடன் ரம்யா கிருஷ்ணன் நடித்த 'பஞ்ச தந்திரம்' படமும் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. அந்தப் படத்தில் சிம்ரன் தான் கதாநாயகி என்றாலும் ரம்யா கிருஷ்ணனுக்குத் தான் படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள படத்தில்தான் ரம்யா கிருஷ்ணன்தான் அவரது ஜோடியாம். இந்தப் படத்தில் அவர்களின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் நடிக்க உள்ள மற்றொரு படத்தில் அமலா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
தன் வயதுக்கேற்ற ஜோடிகளை கமல்ஹாசன் தேர்வு செய்து நடிப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.