பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அஜித்தின் முதல் ஹீரோயின் சங்கவி. அமராவதி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யுடன் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார். நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, மன்னவா, அடடா என்ன பொருத்தம், பொற்காலம், இனி எல்லாம் சுகமே, உள்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் இழந்ததும் சின்னத்திரையில் நடித்தார். தற்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சங்கவிக்கு பலமுறை திருமணம் நடப்பதாக இருந்து கடைசி நேரத்தில் அது தடைபட்டிருக்கிறது. தற்போது பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளர் வெங்கடேஷை திருமணம் செய்து கொள்வது உறுதியாகியிருக்கிறது. திருமணம் இன்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
“இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு மாப்பிள்ளை வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். திருமணத்துக்கு பிறகு பொறுப்பு கூடிவிடும் என்பதால் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்” என்கிறார் சங்கவி.