ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, கடந்த ஆண்டு பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதன்மூலம் சில சமயங்களில், வினோதன் போன்ற படங்களை தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக ரோமியோஜூலியட் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.
இந்தநிலையில், தற்போது மதராசப்பட்டினம் விஜய் இயக்கும் படத்தில் நாயக னாக நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. டைரக்டர் ப்ரியதர்ஷனின் உதவியாளரான விஜய், அவருடன் சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார் என்றபோதும், இதுதான் அவர் இயக்கும் முதல் இந்தி படமாகும்.
மேலும், ஒரு பாலிவுட் பட நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கும் பிரபுதேவா, பாலிவுட் டெக்னீசியன்களுக்கே இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, தமன்னாவையும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். தவிர, இன்னொரு முன்னணி பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.