அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
மும்பை: பிட்டூர் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள, கத்ரீனா கைப்பின், தலைமுடியை செந்நிறமாக மாற்ற, 55 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது; இத்தகவலை, அவர் மறுத்துள்ளார்.
கத்ரீனா, தபு, ஆதித்யராய் கபூர், லாரா தத்தா, உள்ளிட்டோர் நடிப்பில், பிட்டூர் திரைப்படம் உருவாகி உள்ளது. விரைவில், இந்த படம், திரைக்கு வருகிறது. இதில், கத்ரீனாவின் தலை முடியை சிவப்பு நிறத்தில், கலரிங் செய்ய, 55 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில், இதுபற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இச்செய்தியை, கத்ரீனா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: தலைமுடியின் நிறத்தை மாற்ற, 55 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கூறப்படும் தகவல், அடிப்படை ஆதாரம் அற்றது. கலரிங் செய்ய, நீங்கள் நினைத்தால் கூட, இந்தளவுக்கு செலவிட வாய்ப்பு கிடையாது. பரபரப்பை ஏற்படுத்தவே, இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். நடிகையாக இருப்பதால், என்ன செய்தாலும், பொதுமக்களால் ஆர்வமாக பேசப்படுகிறது. ஆனால், பெரும்பாலான செய்திகள் தவறானவையே. சமூக வலை தளத்தில் நான் இல்லாததால், தவறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் போய் விடுகிறது.
இவ்வாறு கத்ரீனா கைப் கூறியுள்ளார்.