ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருட இடைவெளிக்குப்பிறகு மாதவன் தமிழில் நடித்து வெளியாகியுள்ள படம் இறுதிச்சுற்று. இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் அவர். முன்னதாக, படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே மும்பையில் இருந்து சென்னை வந்திருந்து சேனல் மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வந்தார் மாதவன்.
அதோடு, ஜீ தமிழ் சேனலில் குஷ்பு நடத்தி வரும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார் மாதவன். அப்போது மாதவனின் அருகில் குஷ்பு தனது கன்னத்தை கொண்டு செல்ல, அவர் ஒரு மென்மையான முத்தம் கொடுத்தார். அந்த நிகழ்ச்சி சேனலில் ஒளிபரப்பாவதற்கு முன்பு இந்த ஷாட் அடிக்கடி விளம்பரம் செய்யப்பட்டதோடு, இதைப்பார்த்து தமிழ்நாட்டு பெண்களெல்லாம் பொறாமைப்படப் போறாங்க என்று குஷ்பு பேசியிருந்த டயலாக் பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதனால், இறுதிச்சுற்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாதவனிடம், அந்த முத்தம் குறித்து கேட்கப்பட்டபோது, நாங்கள் இருவருமே ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பது வேறு விசயம். ஆனால் குஷ்பு எனது அக்கா. அந்த எண்ணத்துடன்தான் அவருக்கு அன்பான முத்தம் கொடுத்தேன். அது ஒன்றும் எனக்கு தவறாக தோன்றவில்லை என்று சொல்லி சர்ச்சையை ஆப் பண்ணி விட்டார் மாதவன்.