ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிகண்டன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் காக்கா முட்டை. அந்த படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக அவர் நடித்திருந்தார். அப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இருவரும் தயாரித்திருந்தனர். அதுவரை சாதாரண நடிகையாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த படத்திற்கு பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார். அதோடு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இப்போது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். மேலும், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது சம்பந்தமாகவும் திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த நிலையில், வடசென்னை படத்தை முடித்ததும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் தனுஷ். அந்த படம் ஏற்கனவே தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம் போன்று ஸ்லம் ஏரியா கதையில்தான் உருவாகிறாம். அதனால் அந்த கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஒரு ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அப்படி அமையும் பட்சத்தில், காக்கா முட்டை போன்று மீண்டும் வித் அவுட் மேக்கப்பில் நடிக்கப்போகிறார் ஐஸ்வர்யா.