பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஜீவா நடித்த 'ரௌத்திரம்', விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கிய கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாரா நடிக்கும் 'காஷ்மோரா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மே மாதமே ஆரம்பமானது. ஆனால், பல்வேறு காரணங்களால் இடைவெளி விட்டுதான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இனி, தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். கார்த்தி தற்போது 'தோழா' படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் 'காஷ்மோரா' படப்பிடிப்பு இடைவெளியில்லாமல் நடக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.
இப்படத்தில் கார்த்தி மூன்று நான்கு விதமான தோற்றங்களில் நடிக்கிறாராம். அதற்காக தினமும் அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடுவதற்கே மூன்று மணி நேரங்களுக்கு மேலாகி விடுகிறதாம். அது மட்டுமல்லாமல் சுமார் 15 பிரம்மாண்டமான செட்டுகளை உருவாக்கி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு செட்டை உருவாக்குவதற்கே சில பல கோடிகளை செலவு செய்கிறார்களாம்.
கார்த்தி இதுவரை நடித்துள்ள படங்களிலேயே இந்தப் படத்தின் பட்ஜெட்தான் மிக அதிகமாம். சுமார் 60 கோடி ரூபாய் வரை படத்திற்காக செலவு செய்ய உள்ளார்களாம். கார்த்தி, நயன்தாரா முதல் முறையா ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்கிறார்கள். திட்டமிட்டபடி வேலைகள் முடிந்தால் ஆகஸ்ட் மாதமே அல்லது தீபாவளிக்கோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.