அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் |
சுகன் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்த படம் மூன்றாம் உலகப்போர். சுனில் குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் இந்தியா-சீனா போரை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்ததால் இப்போது ஏற்கனவே திரையிட்டதை விட சில தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் சுகன்கார்த்திக் கூறுகையில், மூன்றாம் உலகப்போர் படம் திரையிட்டிருக்கும் தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகரித்துள்ளனர். இதுவே பெரிய சந்தோசமாக உள்ளது. அதைப்பார்த்து விட்டு, ஓரிரு காட்சிகள் மட்டுமே திரையிட்டிருந்த சில தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது அவர்களாகவே மூன்றாம் உலகப்போர் படத்தை கூடுதலான காட்சிகள் திரையிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இம்மாதம் 29-ந்தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுகிறோம். அதனால் சரியான தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.