ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியுள்ள சந்தானம் இன்று அவருடைய 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தற்போது 'தில்லுக்கு துட்டு' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் அடுத்து 'சர்வர் சுந்தரம்' என்ற படத்திலும் கதாநாயகனாகவே நடிக்க உள்ளார். நாயகர்களுக்கு நண்பனாக, நகைச்சுவை நடிகராக நடிப்பதைத் தவிர்த்து விட்ட சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் மட்டுமே மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய குழுவினர் 'சான்டா ஆன்த்தம்' என்ற வீடியோ பாடலை யு டியூபில் வெளியிட்டுள்ளனர். சந்தானம் புகழ் பாடும் விதத்தில் உள்ள அந்தப் பாடலில் விஷால், உதயநிதி ஸ்டாலின், விதார்த், கருணாகரன், தம்பி ராமையா, மயில்சாமி, சஞ்சீவ், பிரேம்ஜி உள்ளிட்டோர் அந்தப் பாடலின் சில வார்த்தைகளுக்கு வாயசைத்து நடித்துக் கொடுத்தும், சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லியுள்ளார்கள்.
யு டியூப் பாப்புலரான பிறகு பலரும் அதைப் பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இப்படி ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை சந்தானமே அறிமுகப்படுத்திவிட்ட பிறகு இனி நமது ஹீரோக்கள் மட்டும் அமைதியாக இருக்கப் போகிறார்களா என்ன ?...தொடர்ந்து பல 'ஆன்த்தம்'களைப் பார்க்கத் தயாராக இருங்கள் ரசிகர்களே...!
இதனிடையே சந்தானம் தனது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு சென்று வருவது வழக்கம். அதேப்போன்று இந்தாண்டும் தனது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை சென்றுள்ளார். மாலையில் தனது ரசிகர்களை அவர் சந்திப்பார் என தெரிகிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தானம்.!